நடன கலைஞர் ரமேஷ் தற்கொலை

1 year ago
Infotainment
aivarree.com

டிக் டொக்கில் அதிக ரசிகர்களை கவர்ந்த நடன கலைஞர் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அடுக்குமாடி கட்டிடம் ஒன்றின் 10வது மாடியில் இருந்து அவர் குதித்து தற்கொலை செய்துக்கொண்டதாக
பொலிசார் தெரிவிக்கின்றனர்

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் சிறுவயதில் இருந்தே நடனம் மட்டுமே தனது விருப்பமாக
கொண்டவர் .

இசைக்கப்பட்ட எந்தப் பாடலுக்கும் நடனம் ஆடி குறுகிய காலத்தில் சமூக வலைதளங்களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்

அத்துடன் நடன கலைஞர் ரமேஷ் அஜித்தின் ‘துனிவு’ படத்தில் நடனக் கலைஞராகவும் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வரவிருக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடனமாடும் வாய்ப்பையும் பெற்றவர் .

இன்று அவரது பிறந்தநாள் என்பதால் ரசிகர்களின் மத்தியில் அவரின் இழப்பு பெரும் பாதிப்பை எற்படுத்தியுள்ளது.