சுப்பர் மார்கெட்களில் முட்டைவிலை சரிவு

1 year ago
aivarree.com

சிறப்பங்காடிகளில் (சுப்பர் மார்கெட்) முட்டைகளின் விலையில் பெருமளவு வீழ்ச்சியேற்பட்டுள்ளது.

குறிப்பிட்ட வர்த்தக நாமங்களுக்கு உட்பட்ட 10 முட்டைகளைக் கொண்ட பொதிகள், கடந்த வாரங்களில 650 ரூபா படி விற்பனை செய்யப்பட்டன.

எனினும் தற்போது அந்த பொதிகள் 520 ரூபாய் வரையில் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது 26 சதவீத வீழ்ச்சியாகும்.

எவ்வாறாயினும், சிவப்பு நிற முட்டைகளின் விலை 46 ரூபா எனவும், வெள்ளை முட்டை விலை 44 ரூபா எனவும் நுகர்வோர் அதிகாரசபையினால் கட்டுப்படுத்தப்பட்டு, வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-டெயிலிமிரர்-