50,000 வருடங்களுக்குப் பின் காணக்கிடைக்கும் அரிதான பச்சை வால் நட்சத்திரம்

1 year ago
World
aivarree.com

பச்சை நிறத்திலான C/2022 E3 (ZTF) என்ற வால் நட்சத்திரம் 50,000 ஆண்டுகளுக்குப் பின்னர் பூமிக்கு மிகவும் அருகில் பயணிக்கவுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

பூமியின் கற்கால யுகத்தில் பூமிக்கு மிக அருகில் பயணித்த இந்த வால் நட்சத்திரம், சூரியனை 50,000 வருடங்களுக்கு ஒருமுறை சுற்றிவருகிறது.

இந்த மாத இறுதியிலும், அடுத்த மா ஆரம்பத்திலும் இந்த வால் நட்சத்திரத்தை வெறுங்கண்களால் ஒளி மாசற்ற இடங்களிலிருந்து தெளிவான வான்வெளியில் பார்க்க முடியும் எனவும், இனி அது 50,000 வருடங்களுக்குப் பிறகே பூமிக்கு அருகில் வரும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த வால் நட்சத்திரத்தைச் சூழவுள்ள வாயுமண்டலம் சூரியனின் வலயட் கதிர்களை அதிகமாகப் பிரதிபலிப்பதன் காரணமாகப் பச்சை நிறத்தில் ஒளி வீசுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சரியாக ஃபெப்ரவரி மாதம் 1ம் திகதி, இந்த வால் நட்சத்திரம் பூமியிலிருந்து 45 மில்லியன் கிலோமீற்றர் தொலைவில் பூமியைக் கடந்து பயணிக்கவுள்ளது.