மின்சக்தி துறைக்கான புதிய ஒழுங்குமுறைப்படுத்தல் நிறுவனம் அறிமுகம்

1 week ago
Sri Lanka
aivarree.com

மின்சக்தி மற்றும் வலுசக்தித் துறைக்கான புதிய ஒழுங்குமுறைப்படுத்தல் நிறுவனமொன்றை அறிமுகப்படுத்த நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ”பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய், விமானங்களுக்கான எரிபொருள், திரவப் பெற்றோலிய வாயு (LPG) மற்றும் உராய்வு எண்ணெய் உள்ளிட்ட பெற்றோலியப் பொருட்கள் உற்பத்தி நிறுவனம், சுத்திகரித்தல், விநியோகித்தல் மற்றும் சந்தைப்படுத்தல் போன்றன தற்போது காணப்படுகின்ற சட்டங்களுக்கமைய மேற்கொள்ளப்பட்டாலும், இத்துறையில் விரிவான ஒழுங்குமுறைப்படுத்தல் பொறிமுறையொன்று இல்லை எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் இத்துறையில் ஏற்படுகின்ற சவால்களுக்கு தீர்வு காண்பதற்கும், உற்பத்திகளின் தரங்களை அதிகரிப்பதற்கும், வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் ஏனைய தரப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பயனுள்ள மற்றும் வினைத்திறனான ஒழுங்குமுறைப்படுத்தல் பொறிமுறையொன்று தேவையென இனம் காணப்பட்டது.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கும், சட்டங்களைத் தயாரிப்பதற்கும் வலுசக்தி, மின்சக்தி அமைச்சின் செயலாளரின் தலைமையிலான குழுவொன்றை நியமிப்பதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி, அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.