சாட்சிகூண்டில் ஏற மறுத்த மைத்திரி | சாடி எச்சரித்த கோட்டை நீதிபதி

1 year ago
Sri Lanka
aivarree.com

ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.

இந்த மனுக்களுக்கு எதிராக மைத்திரி, மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளார்.

அந்த மேன்முறையீடு மீதான இறுதி தீர்ப்பு வரும்வரையில், கோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான நகர்வுகளை முன்னெடுப்பதில்லை என, மனுதாரர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அறியப்படுத்தியிருந்தனர்.

இந்தநிலையில் இன்றைய விசாரணையின் போது நீதிமன்றில் ஆஜரான மைத்திரிபால சிறிசேன, சாட்சிகூண்டில் ஏற மறுத்ததை அடுத்து, நீதவான் கடுமையாக அவரை எச்சரித்தார்.

மனுதாரர்கள் தங்களது மனுக்களை நகர்த்துவதில்லை என மேன் முறையீட்டு நீதிமன்றில் கூறி இருக்கிறார்களே தவிர, பிரதிவாதியை (மைத்திரியை) சாட்சிக் கூண்டில் ஏற வேண்டியதில்லை என்று சொல்லவில்லை என நீதவான், மைத்திரிபால சிறிசேனவுக்கு எடுத்துரைத்தார்.