சங்கக்காரவின் சாதனையை முறியடித்தார் குசல் மெண்டீஸ்

1 year ago
Sri Lanka
aivarree.com

அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் குசல் மெண்டீஸ் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் சாதனையொன்றை முறியடித்துள்ளார்.

காலியில் இடம்பெற்று வரும் அயர்லாந்துடனான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் குசல் மெண்டீஸ் 11 சிக்ஸர்கள் 17 பவுண்டரிகள் அடங்கலாக இரட்டை சதம் கடந்து துடுப்பெடுத்தாடி வருகின்றார்.

இந்த இன்னிங்ஸில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் குசல் மெண்டீஸ், ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த இலங்கை வீரர் என்ற குமார் சங்கக்காரவின் சாதனையை முறியடித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டில் பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் போட்டியொன்றில் சங்கக்கார 8 சிக்ஸர்களை விளாசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.