கோழி இறைச்சி, முட்டை தொடர்பான பிரச்சினைகளை துரிதமாக தீர்ப்பது குறித்து அரசு கவனம்

1 year ago
Sri Lanka
aivarree.com

கோழித் தீவன உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் சோளத்தை இறக்குமதி செய்வது தொடர்பான கலந்துரையாடல் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்க ஆகியோரின் தலைமையில் நேற்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

கோழி இறைச்சி மற்றும் முட்டைக் கைத்தொழிலை சீரான முறையில் முன்னெடுத்து, நாட்டின் கோழி மற்றும் முட்டைத் தேவையை தொடர்ச்சியாக பூர்த்தி செய்வது மற்றும் நியாயமான விலையில் நுகர்வோருக்கு வழங்குவது என்பன குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

கால்நடைத் தீவனத்திற்குப் பயன்படுத்தப்படும் சோளத்தில் தற்போது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள அளவு, எதிர்காலத்தில் உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்படும் அளவு ஆகியவற்றைக் கணக்கிட்டு, இறக்குமதி செய்ய வேண்டிய சோளத்தின் அளவு தொடர்பான அறிக்கையொன்றை தயாரிக்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க விவசாய மற்றும் வர்த்தக அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

இந்த அறிக்கையை துரிதமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சமர்ப்பிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொட, வர்த்தக அமைச்சின் செயலாளர் ஏ.எம்.பி.எம்.பி. அதபத்து மற்றும் விவசாய அமைச்சு, நிதி அமைச்சு, ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி துறைசார் நிறுவனங்களின் அதிகாரிகள், கோழி மற்றும் முட்டை உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் குழு இக்கலந்துரையாடலில் பங்கேற்றது.

இக் கலந்துரையாடலில் மேலும் அவதானம் செலுத்தப்பட்ட விடயங்கள் ஆவன: