அஜித் ரோஹனவின் இடமாற்றம் தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழு தீர்மானம்

1 year ago
Sri Lanka
aivarree.com

தென் மாகாணத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய அஜித் ரோஹனவை கிழக்கு மாகாணத்துக்கு இடமாற்றம் செய்யாதிருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அவரை கிழக்கு மாகாணத்துக்கு இடமாற்றம் செய்யாமல் பொலிஸ் தலைமையகத்திற்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களினால் இந்த தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்துக்கான இடமாற்றம் குறித்து பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அஜித் ரோஹன அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய பொதுப் பாதுகாப்பு அமைச்சின் அங்கீகாரத்தின் கீழ் அஜித் ரோஹன உள்ளிட்ட 07 சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.