காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை புனரமைக்க முடிவு

2 years ago
Sri Lanka
aivarree.com

யுத்தம் காரணமாக மூடப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஞாயிற்றுக்கிழமை (20) காலை விஜயம் செய்தார்.

1950 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை 1990ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக மூடப்பட்டது.

அங்குள்ள 80 சதவீதமான கட்டடங்களை புனரமைத்து பயன்படுத்த முடியும் என பிரதமரின் விஜயத்தின் போது தெரியவந்துள்ளது.

அதன்படி காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை புனரமைக்க அரசாங்கம் முன்வந்துள்ளது.

பிரதமருடன் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் காமினி ஏகநாயக்க ஆகியோரும் சென்றிருந்தனர்.