இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 7 நிறுவனங்கள் போட்டி

1 year ago
Sri Lanka
aivarree.com

ஹம்பாந்தோட்டையில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்கும் இறுதி நாளான நேற்று (27) வரை மொத்தம் 07 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.

இந்த தகவலை மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நைஜீரியா, சீனா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஈரான் ஆகிய 5 வெளிநாட்டு நிறுவனங்களும், இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜிய கூட்டு நிறுவனம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த நிறுவனம் ஆகியனவே இவ்வாறான முன் மொழிவுகளை சமர்ப்பித்துள்ளன.

இதற்கிணங்க தொழில்நுட்பக் குழுவும், கொள்முதல் குழுவும் முன்மொழிவுகளை மதிப்பீடு செய்து பொருத்தமான விண்ணப்பதாரர்களுக்கு உரிமம் வழங்கும் என்றும் அமைச்சர் அந்த டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் ஏற்றுமதி சார்ந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கான ஆர்வத்தை கோருவதற்கு கடந்த 2023 ஜனவரியில் எரிசக்தி அமைச்சுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.