இலங்கை அணிக்கு அபராதம்

1 year ago
SPORTS
aivarree.com

ஒக்லேண்டில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மெதுவான ஓவர் வீதத்தை பேணியதற்காக இலங்கை அணிக்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி இலக்கை விட ஒரு ஓவர் குறைவாக வீசியதாக போட்டி மத்தியஸ்த்தர் குழாமினால் தீர்ப்பளிக்கப்பட்டதை அடுத்து இந்த அபராத விதிப்பு அறிவிக்கப்பட்டது.

குறைந்தபட்ச ஓவர்-வீதம் குற்றங்கள் தொடர்பான ஐசிசி நடத்தை விதிகள் மற்றும் வீரர்கள் மற்றும் வீரர் ஆதரவு பணியாளர்களுக்கான விதி 2.22 இன் படி, வீரர்கள் ஒவ்வொரு ஓவருக்கும் போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.

அதேநேரம் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ண சூப்பர் லீக் விளையாட்டு நிபந்தனைகளின் பிரிவு 16.12.2 இன் படி, ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு குறைபுள்ளி அபராதமும் விதிக்கப்படுகிறது.

இதன் விளைவாக, சுப்பர் லீக் தொடரின் போது இலங்கை தனது புள்ளிகள் கணக்கில் இருந்து ஒரு புள்ளியை இழக்கும்.

தசுன் சானக குற்றத்தை ஒப்புக்கொண்டு விதிக்கப்பட்ட தண்டனையை ஏற்றுக்கொண்டார்.

எனவே முறையான விசாரணைக்கு அவசியமில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil sports news