மத்திய கிழக்கு நாடுகளின் நாணய பெறுமதியும் வீழ்ச்சி

1 year ago
Sri Lanka
aivarree.com

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்து வரும் நிலையில் மத்திய கிழக்கு நாடுகளின் நாணயங்களின் பெறுமதியும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோபூர்வ நாணய மாற்று விகிதங்களின்படி இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 315.84 ரூபாவாகும், விற்பனை விலை 332.87 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேநேரம் கட்டார் ரியாலின் பெறுமதி 87.19 ரூபாவாகும், சவுதி அரேபியே ரியாலின் பெறுமதி 85.19 ரூபாவாகவும் மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜிய திர்ஹாம் ஒன்றின் பெறுமதி 87.12 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.