இலங்கைக்கு IMF சொல்லும் பரிந்துரைகள்

2 years ago
Sri Lanka
aivarree.com

சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கையின் பொருளாதார மீட்சிக்காக முன்வைத்துள்ள பரிந்துரைகள்.

பேரண்ட பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்க, குறுங்கால மற்றும் இடைக்காலத்தை உள்ளடக்கிய நம்பகமான மற்றும் ஒத்திசைவான மூலோபாயத்தை செயல்படுத்துவது அவசியம்.

குறிப்பான நடவடிக்கைகளுடன் கூடிய விரிவான கொள்கைகளின் தொகுப்பை IMF பணிக்குழு பரிந்துரைக்கின்றது:

⁃ கணிசமான வருவாய் அடிப்படையிலான நிதி ஒருங்கிணைப்பு. VAT மற்றும் வருமான வரிகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் (வரி அதிகரிப்பு)

⁃ நஷ்டமடைந்து வரும் பொது நிறுவனங்களால் ஏற்படும் நிதி அபாயங்களைக் குறைக்க, விலை (கட்டண) நிர்ணய சீர்திருத்தங்கள் செய்தல். (கட்டண அதிகரிப்பு)

⁃ கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்க ஒரு விரிவான உத்தியை உருவாக்குதல்.

⁃ பணவீக்க இலக்கு வரம்பின் சமீபத்திய மீறல் தற்காலிகமானது மட்டுமே என்பதை உறுதிப்படுத்த, நெருங்கிய கால (குறுங்கால) நாணயக் கொள்கையில் இறுக்கம் பேணப்படல்.

⁃ மத்திய வங்கியின் பாரிய திறைசேரி உண்டியல் இருப்புகளை படிப்படியாக அகற்றுவதற்கான சமீபத்திய வரவேற்கத்தக்க நடவடிக்கைகளானது நிதி அமைச்சுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பின் மூலம் தொடர வேண்டும்.

⁃ சந்தை சக்திகளால் நிர்ணயிக்கப்படும் வகையில் நெகிழ்வான நாணமாற்று விகிதத்தை படிப்படியாக மீட்டமைத்தல் (பெறுமதி மிதப்பு – *நடைமுறைக்கு வந்துவிட்டதுஅய்வரி)

⁃ நாணய பரிவர்த்தனை விகிதத்தில் ஒழுங்கற்ற நகர்வுகளைத் தவிர்க்க, இந்த மாற்றம் (நாணய பெறுமதியை மிதப்பில் விடும் தீர்மானம்) கவனமாக அமுலாக்கப்பட வேண்டும்.

⁃ சமூகப் பாதுகாப்பு தொடர்கள் வலுப்படுத்தப்பட வேண்டும். – செலவின அதிகரிப்பு, பாதுகாப்பு விரிவுபடுத்துதல் மற்றும் இலக்கை மேம்படுத்துதல் ஆகியன மூலம், பேரண்டப் பொருளாதார சீராக்கலின் பாதகமான தாக்கங்களால் (வறுமை போன்றன) பாதிக்கப்படக்கூடிய குழுக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.