ஆளுநர் ஆகிறார் செந்தில் | அழுத்தம் கொடுக்கிறார் ஜீவன்

1 year ago
Sri Lanka
aivarree.com

ஊவா மாகாண முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான அழுத்தங்களை அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அய்வரிக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஜனாதிபதியிடம் இதொகா முன்வைத்துள்ள கோரிக்கைகளில் செந்தில் தொண்டமானுக்கு ஆளுநர் பதவி வழங்க வேண்டும் என்பதுவும் ஒன்று என குறிப்பிட்டார்.

தமது கோரிக்கையின் படி விரைவில் செந்தில் தொண்டமானுக்கு ஆளுநர் பதவி கிடைக்கவுள்ளதாகவும் அவர் அய்வரி செய்திகளிடம் கூறினார்.

ஊவா மாகாணத்துக்கா செந்தில் ஆளுநராக நியமிக்கப்படுவார்? என கேட்கப்பட்ட போது, “அந்த மாகாணத்துக்கு என்று இல்லை, ஏதேனும் ஒரு மாகாணத்துக்கு செந்தில் ஆளுநராவார்” என்றும், “மலையகத்தை மட்டும் மையப்படுத்திய நிலைமையில் இருந்து அரசியல் விரிவாக்கம் பெற வேண்டுமென தாம் விரும்புகிறேன்” என்றும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டார்.