தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி

7 months ago
aivarree.com

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் நாட்டில் தங்கத்தின் விலையில் இன்று (03) சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு செட்டியார்த் தெருவின் இன்றைய நாளுக்கான தங்க விலைகளுக்கு அமைவாக,

24 கரட் தங்கம் ஒரு பவுண் 165,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 153,000 ரூபாவாகவும் காணப்படுகிறது.

இதனிடையே, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,820.02 அமெரிக்க டொலர்களாக காணப்படுகிறது.

அதேநேரம், வெள்ளி ஒரு அவுன்ஸ் 21.01 அமெரிக்க டொலர்களாக உள்ளது.