ஆகஸ்ட்டில் ஏற்றுமதி வருமானம் $1 பில்லியனை விஞ்சியது

1 year ago
aivarree.com

இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதியின் மூலம் அதிகளவான வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி மூலம் 1,119 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைத்துள்ளது.

எனினும் இது 2022 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 8.7 சதவீத குறைவாகும்.

அதேநேரம், 2023 ஜனவரி – ஆகஸ்ட் வரையிலான ஏற்றுமதி வருமானம் கடந்த ஆண்டின் குறித்த காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 10.1 சதவீதம் குறைந்துள்ளது.

தொழிலாளர் பணவனுப்பல்கள் மற்றும் சுற்றுலாத்துறையிலிருந்தான வருவாய்கள் ஆகிய இரண்டும் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆகஸ்ட்டில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளைப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.