பாதீடுக்கு முன் மீண்டும் அமைச்சரவையில் மாற்றம்?

6 months ago
Gossip
aivarree.com

2024 வரவு-செலவுத் திட்டத்திற்கு முன்னதாக அமைச்சரவை மீண்டும் திருத்தம் செய்யப்பட உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எம்.பி.க்களின் ஆதரவைப் பெறும் நோக்கில் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவை மாற்றத்தில் தற்போது அமைச்சுப் பதவிகளை வகிக்காத ஒரு குழுவினருக்கு புதிய அமைச்சுப் பதவிகளும், பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பலருக்கு அமைச்சு மற்றும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு பதவிகளும் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றன.

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பர் 13 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்.

வாக்கெடுப்பு டிசம்பர் 13 ஆம் திகதி நடத்தப்படும்.