இறுதி பந்து வரையில் பரபரப்பான போட்டி | இறுதியில் வென்றது ஆசி

7 months ago
SPORTS
aivarree.com

உலகக்கிண்ணத் தொடரில் இன்று அவுஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் மோதின. 

போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுதிரேலியா 50 ஓவர்களில் 388 ஓட்டங்களைப் பெற்றது. 

அவுஸ்திரேலியா சார்பாக றெவிஸ் ஹெட் 67 பந்துகளில் 109 ஓட்டங்களையும், டேவிட் வோனர் 81 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 

க்லென் மெக்ஸ்வெல் 24 பந்துகளில் 41 ஓட்டங்களைப் பெற்றார். 

பதிலளித்தாடிய நியூசிலாந்து ஆரம்பம் முதலே வேகமாக துடுப்பாடியது. 

ரச்சின் ரவீந்த்ரா 89 பந்துகளில் 116 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டமிழந்தார். 

டரில் மிச்செல் 54 ஓட்டங்களைப் பெற்றார். 

இறுதி நேரத்தில் அதிரடியாக துடுப்பாடி அணிக்கு நம்பிக்கை கொடுத்த ஜேம்ஸ் நீசம், வெற்றிபெறக்கூடிய தருணத்தில் ரன் அவுட் ஆனார். 

இறுதி ஓவரில் 19 ஓட்டங்கள் தேவை என்றிருந்த போது, மிச்சல் ஸ்டார்க் பந்துவீசினார். 

அவர் இறுதி ஓவரின் இரண்டாவது பந்தை அகலப்பந்தாக வீசியதோடு, நான்கு ஓட்டமாகவும் அமைந்தது. 

இந்த நிலையில் 5 பந்துகளில் 13 ஓட்டங்கள் தேவை என்ற நிலை இருந்தது. 

நீசம் அடித்தாட முனைந்த போதும் சிறப்பான களத்தடுப்பின் காரணமாக பவுண்டரிகள் தடுக்கப்பட்டன. 

இரண்டு பந்துகளில் 7 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் நீசம் ரன் அவுட் ஆனார். 

இறுதியில் அவுஸ்திரேலியா 5 ஓட்டங்களால் வென்றது. 

உலக்கிண்ண தொடர் ஒன்றில் இரண்டு அணிகளும் பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை இதுவாகும் (771)