இந்திய அணிக்கு தலைவரானார் சூரியகுமார் யாதவ்

8 months ago
SPORTS
aivarree.com

ஹர்திக் பாண்டியா கணுக்கால் காயத்தில் இருந்து இன்னும் குணமடையவில்லை. 

இந்த நிலையில், நவம்பர் 23 ஆம் திகதி தொடங்கும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 ஐ தொடரில் இந்திய அணியை சூர்யகுமார் யாதவ் வழிநடத்துவார். 

ருதுராஜ் கெய்க்வாட் முதல் மூன்று ஆட்டங்களுக்கு துணை தலைவராக இருப்பார். 

அதற்கு பின்பு கடைசி இரண்டு போட்டிகளுக்கான அணியில் சேரும் ஸ்ரேயாஸிடம் பொறுப்பை ஒப்படைப்பார்.

உலகக் கோப்பை அணியில் இருந்து, சூர்யகுமார், இஷான் கிஷான் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் மட்டுமே முழு தொடருக்கும் பெயரிடப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் காயத்தினால் உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றப்பட்ட அக்சர் படேல் அணிக்கு திரும்பியுள்ளார். 

இருப்பினும், ஆகஸ்ட் மாதம் அயர்லாந்துடனான டி20  அணியில் இடம்பெற்றிருந்த சஞ்சு சாம்சன் மற்றும் ஷாபாஸ் அஹமட் ஆகியோருக்கு இடமில்லை.

ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடைபெறும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோற்ற நிலையில்- இந்த போட்டி முடிந்த நான்கு நாட்களுக்குப் பிறகு தொடர் தொடங்கும். 

விசாகப்பட்டினத்தில் தொடங்கும் டி20 தொடர் திருவனந்தபுரம் (நவம்பர் 26), கவுகாத்தி (நவம்பர் 28), ராய்ப்பூர் (டிசம்பர் 1), பெங்களூரு (டிசம்பர் 3) ஆகிய இடங்களில் நடைபெறும். 

அவுஸ்திரேலியாவுடனான டி20 போட்டிகளுக்கான இந்திய அணி: 

சூர்யகுமார் யாதவ் (தலைவர்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை தலைவர்), இஷான் கிஷன் (Wk), யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (WK), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், முகேஷ் குமார், ஷ்ரேயாஸ் ஐயர் (துணை தலைவர், கடைசி இரண்டு டி20 போட்டிகளுக்கு மட்டும்)