20 லட்சம் ரூபாவுக்கு கனடா வீசா பெற்றவர் விமான நிலையத்தில் கைது

7 months ago
Sri Lanka
aivarree.com

கனடாவுக்கு செல்வதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு சென்ற 34 வயதான இளைஞர் ஒருவர் கைதானார். 

மெல்சிரிபுரவைச் சேர்ந்த அவரது ஆவணங்கள் மீது சந்தேகம் கொண்ட விமான நிலைய அதிகாரிகள், அவற்றை பரிசோதித்துள்ளனர். 

இதன்போது அவரது கடவுச் சீட்டில் பதிக்கப்பட்டிருந்த கனடாவுக்கான வீசா போலியானது என கண்டறியப்பட்டது. 

அதனை அவர் 2 மில்லியன் ரூபாய் செலுத்தி தயாரித்தமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இதனை அடுத்து கைது செய்யப்பட்ட அவர், குற்றப் புலனாய்வு பிரிவிடம் கையளிக்கப்பட்டார்.