ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பில் கல்வி அமைச்சிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

1 month ago
Sri Lanka
aivarree.com

தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலங்களில் கற்பிப்பதற்காக மாகாண பாடசாலைகளில் சுமார் 700 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக மேல்மாகாண சபையின் பிரதம செயலாளர் தம்மிகா விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இதனால் அந்த மொழி மூலங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், போதிய தகுதி வாய்ந்த பட்டதாரிகள் இல்லாததால் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதில் சிக்கல் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, குறித்த வெற்றிடங்களை எவ்வாறு நிரப்புவது தொடர்பில் கல்வி அமைச்சிடம் அறிவுறுத்தல்களை மாகாண சபை கோரியுள்ளது.

இந்நிலையில், மாகாணத்தில் உள்ள ஏனைய ஆசிரியர் வெற்றிடங்களுக்கு அண்மையில் 2800 இற்கும் அதிகமானோர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர்.