புதிய பொலிஸ் மா அதிபர் இவ்வாரம்

5 months ago
Sri Lanka
aivarree.com

பொலிஸ் மா அதிபராக பதவி வகித்த சீ.டி.விக்ரமரத்ன நேற்று (25) முதல் தமது பதவியில் இருந்து விடைபெற்றார்.

இதனை அடுத்து புதிய பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படவுள்ளவரது பெயரை ஜனாதிபதி இவ்வாரம் அரசியலமைப்பு சபைக்கு அனுப்பி வைக்கவுள்ளார்.

சண்டே டைம்ஸ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

புதிய பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்படலாம் என்று முன்னதாகவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

எனினும் அவரை இந்த பதவியில் நியமிப்பது தொடர்பாக பல சிக்கல்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.