தினேஷ் ஷாப்டர் கொலை | புதிய கோணத்தில் விசாரணை 

2 years ago
(448 views)
  • ஆதாரங்களை அழித்த கொலையாளி/கள்
  • லொக்கேஷன் ஷெயாரிங் தொடர்பாக சந்தேகம்
  • சந்தேகத்துக்கிடமான 4 இலக்கங்கள்
  • காணாமல் போன உணவுப் பொதிகள்

—————-——————-///////—————————-////——————-

தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் கொலையில் இன்னும் மர்மம் நீடிக்கிறது. 

இது தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் உள்ளிட்ட போலீஸ் குழுக்கள் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றன. 

ஆனால் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இந்தக் கொலை  குழுவொன்றினால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. 

கொலை நடந்த இடத்தில் எந்த ஆதாரங்களையும் விட்டு வைக்காத அளவுக்குச் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.

சந்தேகத்துக்கிடமான 4 இலக்கங்கள்

தினேஷ் ஷாப்டரின் தொலைபேசியை ஆராய்ந்ததில் சந்தேகத்திற்கிடமான 04 தொலைபேசி இலக்கங்கள் இனங்காணப்பட்டுள்ளன. 

அந்த இலக்கங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு பொரள்ளை பொலிசார் நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளனர். 

மேலும், அவரது மனைவி உட்பட 50 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

காணாமல் போன உணவுப் பொதிகள்

ஷாப்டர் தனது வீட்டை விட்டு வெளியேறி பொரள்ளை மயானத்திற்குச் செல்லும் வழியில், இரண்டு சிற்றுண்டிப் பொதிகளை உணவகம் ஒன்றில் கொள்வனவு செய்ததார்.

ஆனால் வாங்கிய சிற்றுண்டிகள் அடங்கிய இரண்டு பார்சல்களும் அவர் இருந்த காரில் காணப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது. 

லொக்கேஷன் ஷெயாரிங் தொடர்பாக சந்தேகம்

தினேஷ் ஷாப்டர் கொலை செய்யப்பட்ட நாளுக்கு முன்னர் தனது மனைவி டானி ஷரின் மற்றும் அவரது நண்பர் பேட்ரிக் கிறிஸ் பெரேரா ஆகியோருக்கு கையடக்கத் தொலைபேசியில் லொக்கேஷன் டிராக்கிங் வசதியை வழங்கியிருந்தாரா? என்பதை கண்டறிய குற்றப் புலனாய்வு திணைக்களம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

ஃபட்ரிக் கிறிஸ் பெரேரா வத்தளை ஹெந்தலையை வசிப்பிடமாகக் கொண்டவர்.

அவர் 19 வருடங்களாக தினேஷ் ஷாப்டருடன் நெருக்கமாகப் பணியாற்றியவர்.

மேலும் அவர் நிறுவனப் பணிப்பாளர்களுள் ஒருவர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் துறையின் புலனாய்வாளர்கள், தினேஷ் ஷாஃப்டரின் கைபேசியில் தடயவியல் ஆய்வு நடத்தி, இதற்கு முன்னர் லொக்கேஷன் பகிர்வு வசதியை அவரது மனைவி மற்றும் நண்பருக்கு வழங்கியுள்ளாரா என ஆராய்ந்து வருவதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Show full article

Leave a Reply

Your email address will not be published.