வெகுவாக குறைந்த மரக்கறி விலைகள்

1 year ago
Sri Lanka
aivarree.com

பேலியகொட, மெனிங் சந்தையில் அதிகளவான மரக்கறிகளின் விலைகள் வெகுவாக குறைந்துள்ளன.

மரக்கறிகளின் அதிக உற்பத்தி மற்றும் குறைந்த கேள்வியே விலை வீழ்ச்சிக்குக் காரணம் என பேலியகொட, மெனிங் சந்தை சங்கத்தின் தலைவர் எச்.எம்.உபாசேன தெரிவித்துள்ளார்.

சந்தையில் போஞ்சு, கரட், கத்தரி, தக்காளி, லீக்ஸ் மற்றும் கோவா, குடைமிளகாய் ஆகியவற்றின் விலைகள் வெகுவாக குறைந்துள்ளன.

இதேவேளை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்ததைத் தொடர்ந்து, பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன.

இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் அடுத்த சில வாரங்களில் மேலும் குறையும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.