பணவீக்கம் குறைந்த நாடாக மாறப்போகும் இலங்கை | ருவான் நம்பிக்கை

1 year ago
Sri Lanka
aivarree.com

இலங்கை இந்த ஆண்டு இறுதியில் உலகில் பணவீக்கம் குறைந்த நாடாக மாறும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை கடுமையான பணவீக்கம் காரணமாக சர்தேச பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்தது.

ஆனால் தற்போது அது 20ம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் பாரிய அளவு விலைக்குறைப்புகள் மேற்கொள்ளப்படும்.

அதன் ஊடாக உலகில் பணவீக்கம் குறைந்த நாடாக இலங்கை மாறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.