வர்த்தக வங்கிகளின் நாணய மாற்று விகிதம்

1 year ago
aivarree.com

இலங்கையிலுள்ள சில வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த செவ்வாய்க்கிழமையுடன் (ஏப்ரல் 04) ஒப்பிடுகையில் இன்று நிலையானதாக உள்ளது.

  • கொமர்ஷல் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றம் பெறாமல் முறையே 311.76 ரூபாவாகவும், 330 ரூபாவாகவும் உள்ளது.
  • சம்பத் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றம் பெறாமல் முறையே 313 ரூபாவாகவும், 328 ரூபாவாகவும் உள்ளது.
  • மக்கள் வங்கி : மக்கள் வங்கியில் இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சற்று அதிகரித்துள்ளது.
    அதன்படி டொலரின் கொள்முதல் பெறுமதி 311.59 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 334.02 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.