உலகக் கிண்ணத்தையும் தவற விடுவாரா வில்லியம்சன்?

1 year ago
SPORTS
aivarree.com

இவ் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ள 2023 ஐ.சி.சி. ஆடவர்க்கான ஒருநாள் உலகக் கிண்ணத்தில் கேன் வில்லியம்சன் விளையாடுவது கேள்விக் குறியாகியுள்ளது.

முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வழமையான நியூஸிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளமையினால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸுக்காக ஆடியபோது சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான முதல் போட்டியிலேயே வில்லியம்சன் காயமடைந்தார்.

இதனால் ஐ.பி.எல். தொடரிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டதுடன், அவரின் இடத்தை நிரப்புவதற்காக இலங்கையின் சகலதுறை வீரர் தசூன் சானக்கவை குஜராத் அணி 50 இலட்சம் இந்திய ரூபாவுக்கு ஒப்பந்தம் செய்தது.

இந்நிலையிலேயே வில்லியம்சனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளதுடன், குறைந்தது அவர் ஆறு மாதம் ஓய்விலிருக்க வேண்டும் என்றும் வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இதனால் அவர் எதிர்வரும் ஒக்டோபரில் ஆரம்பமாகும் ஐ.சி.சி. உலகக் கிண்ணத்தைத் தவறவிடலாம் என்று கூறப்படுகின்றது.

எவ்வாறெனினும் எதிர்வரும் உலகக் கிண்ணத்தில் தனது அணிக்காக விளையாட தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்பேன் என்று கேன் வில்லியம்சன் கூறியுள்ளார்.

TSN