வருமான வரி பதிவு ; நிதி இராஜாங்க அமைச்சின் புதிய அப்டேட்

11 months ago
Sri Lanka
aivarree.com

18 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டுமென்பது அவர்களுக்கு வரி அறவிடப்படும் என்பதல்ல என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

வருமான வரிக் கணக்கின் கீழ் நலன்புரிப் பலன்களை விநியோகிக்கவே மேற்படி தனிநபர்களின் பதிவு அவசியம் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

எனவே 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் உள்ளூர் வருமானவரி திணைக்களத்தில் வரிக் கணக்கினை திறப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வரிக் கணக்கின் விவரங்களின் அடிப்படையில் தனிநபர்களுக்கான சலுகைகள் குறித்து அரசாங்கம் தீர்மானங்களை மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வைத்தியர்கள், பொறியியலாளர்கள், கட்டடக் கலைஞர்கள், கணக்காளர்கள் உள்ளிட்ட 14 வகைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் நேற்று (01) முதல் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கும் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.