CBSL இன் உத்தியோகபூர்வ நாணய மாற்று விபரம்

10 months ago
aivarree.com

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

அதன்படி, நேற்று 283.87 ரூபாவாக காணப்பட்ட டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி இன்று 287.42 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

கொள்முதல் பெறுமதியும் 297.23 ரூபாவிலிருந்து, 300.32 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளிலும் இன்று அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.