வட்டி விகிதங்களை சீரமைக்க வங்கிகளுக்கு 4-5 மாதங்கள் எடுக்குமாம்

10 months ago
aivarree.com

இலங்கை வங்கிகளுக்கு மத்திய வங்கியினால் நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதங்களை சீரமைப்பதற்கு 4-5 மாதங்கள் தேவைப்படும் என இலங்கை வர்த்தக சம்மேளனதின் தலைவர் துமிந்த ஹுலங்கமுவ தெரிவித்துள்ளார்.

வங்கிகள் அதிக வட்டி விகிதத்தில் பெறப்பட்ட பழைய வைப்புகளுக்கு அவற்றின் நிறைவு காலம் வரை நிதியளிக்க வேண்டியதன் காரணமாக இந்த தாமதம் ஏற்படும்.

மத்திய வங்கி தனது கொள்கை வட்டி விகிதங்களைக் குறைத்துள்ள போதிலும், கடந்த வருடத்தில் வங்கிகளால் பெறப்பட்ட வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்படாது.

வங்கிகளின் வட்டி விகிதங்களை குறைக்க மத்திய வங்கி தலையிடும்.

எவ்வாறெனினும் வங்கிகள் முந்தைய ஆண்டில் 20-25% விகிதத்தில் புதிய வைப்புகளை எடுத்துள்ளன, அவற்றை திருப்பிச் செலுத்த வேண்டும்.

இந்த அதிக வட்டி வைப்புகளின் காலம் நிறவைடைந்ததும், குறைந்த விகிதத்தில் புதிய வைப்புகளை வங்கிகள் பெற்றதும், தங்கள் கடன் விகிதங்களை வங்கிகள் குறைக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

இலங்கை மத்திய வங்கி அண்மையில் எடுத்த தீர்மானத்தில், துணைநில் கடன் வசதி வீதம் (SDFR) மற்றும் துணைநில் வைப்பு வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை முறையே 11% மற்றும் 12% ஆக 200 அடிப்படை புள்ளிகளால் குறைத்தது.

ஜூலை 7 ஆம் தேதி நிலவரப்படி, சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மை கடன் வழங்கல் வீதம் (AWPR) 19.17% ஆக இருந்தது.

வட்டி விகிதங்களைக் குறைப்பதன் மூலம் வங்கிகளும் நிதித் துறையும் கொள்கை விகிதக் குறைப்பின் நன்மைகளை வணிகங்களுக்கும் தனிநபர்களுக்கும் வழங்க வேண்டும் என்று மத்திய வங்கி எதிர்பார்க்கிறது.

எவ்வாறாயினும், இந்த மாற்றங்களின் பரிமாற்றம் போதுமானதாகவும் மெதுவாகவும் கருதப்பட்டால், இடமளிக்கும் நாணயக் கொள்கையை சரியான நேரத்தில் மற்றும் போதுமான பரிமாற்றத்தை உறுதிசெய்ய பொருத்தமான நிர்வாக நடவடிக்கைகளை செயல்படுத்துவது குறித்து பரிசீலிப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.