வட்செப் அறிமுகப்படுத்தவுள்ள கவர்ச்சிகரமான அப்டேட்கள்

1 year ago
World
aivarree.com

வட்செப் (WhatsApp) தொடர்ந்து பல்வேறு சேவைப் புதுப்பித்தல்களை வழங்கி வருகிறது.

வட்செப் நிறுவனம் எதிர்வரும் மாதங்களில் புதிய  அம்சங்கள் பலவற்றை வெளியிடவுள்ளதாக வட்செப் கண்காணிப்பு தளமான WhatsAppinfo தெரிவித்துள்ளது. 

இவ்வாறு அறிமுகப்படுத்தப்படவுள்ள கவர்ச்சிகரமான புதிய 5 அப்டேட்கள்

1) செய்திகளைத் திருத்தலாம்

அனுப்பப்பட்ட செய்திகளில் தவறுகளை எளிதாக திருத்தலாம் அல்லது குறிப்பிட்ட செய்திகளை நீக்காமல் கூடுதல் தகவலைச் சேர்க்கலாம்.  அனுப்பிய செய்திகளைத் திருத்துவதற்கு வட்செப் 15-வினாடி அவகாசத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்கள் ஒரு செய்தியைத் திருத்தினால், அது அதன் குமிழிக்குள் “திருத்தப்பட்ட” லேபிளால் குறிக்கப்படும். 

2) செய்திகளைப் “பின்” செய்யலாம்

இது டெலிகிராம் போன்ற பிற செயலிகள் பல ஆண்டுகளாகக் கொண்டிருக்கும் மற்றொரு அம்சமாகும். ச்செட் விண்டோவில் செய்திகளை பின் (Pin) செய்ய WhatsApp விரைவில் உங்களை அனுமதிக்கும்.  இது குழு மற்றும் தனிப்பட்ட அரட்டைகளில் தொழிற்படும். 

ஒரு செய்தியை பின் செய்வதன் மூலம் அந்த குறிப்பிட்ட செய்தியை வேகமாக அணுகலாம்.  அரட்டை குமிழியில் செய்தி பின் செய்யப்பட்டுள்ளதைக் குறிக்கும் சிறிய ஐகானை செயலி காண்பிக்கும்.

3) மறைந்து போகும் செய்திகளுக்கான 15  விருப்பத் தெரிவுகள்

மறைந்து போகும் தகவல்களை அனுப்பும் போது அது எவ்வளவு நேரத்தில் மறைய வேண்டும் என்பதை தீர்மானிக்க 15 தெரிவுகள் வழங்கப்படும்.  

ஏற்கனவே உள்ளவற்றைத் தவிர புதிதாக 1 மணிநேரம், 3 மணிநேரம், 6 மணிநேரம், 12 மணிநேரம், 2 நாட்கள், 3 நாட்கள், 4 நாட்கள், 5 நாட்கள், 6 நாட்கள், 14 நாட்கள், 21 நாட்கள், 30 நாட்கள், 60 நாட்கள், 180 நாட்கள் மற்றும் 1 ஆண்டு என தெரிவுகள் அமையும். 

முக்கியமான மற்றும் இரகசியமான செய்திகளுக்கு குறுகிய நேரமும், அதே சமயம், சேமிப்பிற்கு (Storage) இடையூறு ஏற்படாத வகையில் செய்திகளை அழிக்க நீண்டகாலத்தையும் தெரிவு செய்துகொள்ளலாம். 

4) ஒலி செய்தியை ஒருமுறை மட்டும் பார்க்கும் வசதி

ஒருமுறை மட்டும் படங்களைப் பார்க்கும் வகையில் அனுப்புவது போல, விரைவில் ஒலி செய்தியையும் ஒருமுறை மட்டும் பார்க்கும் வகையில் அனுப்ப முடியும். 

இந்த செய்திகளை ஒருமுறை மட்டுமே இயக்க முடியும். 

நீங்கள் அதிக முக்கியமான ஓடியோவை அனுப்பினால் அல்லது தகவல் பெறுகின்றவரை நம்பவில்லை என்றால், இது பயனுள்ள அம்சமாக இருக்கலாம்.

5) வேகமான WhatsApp Windows செயலி

இது கடந்த வாரத்தில் தொடங்கிவிட்டது. வட்செப் நிறுவனம் விண்டோஸில் புதிய செயலியை வெளியிட்டுள்ளது. 

அதில் இப்போது வீடியோ அழைப்புகளில் 32 பேர் வரை சேர்க்கலாம் – பெரிய மடிகணினி திரைகளைப் பயன்படுத்த உங்களை அனுமதிக்கிறது. செயலி இப்போது வேகமாகவும் உள்ளது.

நிலையான செயலிகளில் இந்த அப்டேட்களை வட்செப் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் மேலும் பல அம்சங்களிலும் பரிசீலிக்கப்படும்.  

(ஃபோர்ப்ஸ்)