பிரான்ஸ் கலவரம்: 667 பேர் கைது

10 months ago
World
aivarree.com

17 வயது இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் பிரான்ஸ் முழுவதும் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை மொத்தம் 667 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை போக்குவரத்து நெரிசலின் போது அல்ஜீரிய மற்றும் மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்த 17 வயது இளைஞரை காவல்துறை சுட்டுக் கொன்றதால் தூண்டப்பட்ட கலவரம் மூன்றாவது நாள் இரவுமாக தொடர்ந்தது.

பாரிஸில் பலத்த பொலிஸ் சுற்றிவளைப்புகளையும் மீறி வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்டு வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், போராட்ட வன்முறையை “நியாயப்படுத்த முடியாதது” என்று கூறியதுடன், வாரத்தில் இரண்டாவது தடவையாகவும் விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந் நிலையில் துப்பாக்கி சூட்டினை முன்னெடுத்த 38 வயதான அதிகாரி வியாழன் அன்று தன்னார்வ கொலைக்காக முறையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.