பிரான்ஸில் தொடரும் அமைதியின்மையால் 150 பேர் கைது

10 months ago
World
aivarree.com

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள புறநகர் பகுதியான நான்டெர்ரே-வில் பொலிஸாரால் சிறுவன் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் வன்முறை வெடித்துள்ளது.

17 வயது சிறுவன் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிரான போராட்டங்களை அடக்க ஆயிரக்கணக்கில் பாதுகாப்புப் படைகள் பிரான்சில் இரண்டாவது இரவாகவும் பாதுகாப்பினை பலப்படுத்தி இருந்தனர்.

புதன்கிழமை இரவு பாரிஸைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் சுமார் 2,000 கலகத் தடுப்புப் பொலிஸார் வரவழைக்கப்பட்டதுடன், இதுவரை குறைந்தது 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காணொளிகள் எதிர்ப்பாளர்களினால் வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்டதையும், கார்கள் மற்றும் சொத்துக்களுக்கு தீ வைத்துள்ளதையும் காட்டுகின்றது.