பிரதமராகிறார் மகிந்த ராஜபக்ச 

12 months ago
Sri Lanka
aivarree.com

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளதாக உறுதியான தகவல் கிடைத்துள்ளது.


இன்று அவர் பிரதமராக பதவி ஏற்பார் என்று முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்த போதும், அதில் உண்மையில்லை.

அவரை பிரதமராக நியமிக்க ஜனாதிபதியும் இணக்கம் தெரிவித்துள்ளதாக நம்பகமான தகவல்கள் அய்வரிக்கு கிடைத்துள்ளது.



அத்துடன் மகிந்தவின் உயர்மட்டத் தரப்பிலும் இந்தத் தகவல் அய்வரிக்கு உறுதி செய்யப்பட்டது. 

ஜனாதிபதி மகிந்தவை பிரதமராக நியமிக்க இணக்கம் தெரிவித்துள்ள போதும், பதவி ஏற்புக்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று மகிந்த தரப்பிலிருந்து அய்வரிக்கு தெரிவிக்கப்பட்டது.