பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் HRCSL விசேட வலியுறுத்தல்

1 year ago
Sri Lanka
aivarree.com

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை தற்போதைய சரத்துக்களுடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டாம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL ) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வலியுறுத்தியுள்ளது.

இந்த சட்டமூலமானது மனித உரிமைகளை மீறும் மற்றும் தன்னிச்சையான தடுப்புக்காவல் மற்றும் துன்புறுத்தலுக்கு வழிவகுக்கும் என்ற கவலைகளுக்கு மத்தியில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

புதிய பயங்கரவாத சட்டமூலம் தொடர்பில் சிவில் சமூகக் குழுக்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பரந்த அளவிலான பங்கேற்புடன் ஒரு தேசிய உரையாடலின் முக்கியத்துவத்தையும் HRCSL வலியுறுத்தியுள்ளது.

தற்போதுள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை (PTA) மாற்றும் சட்டமூலம், மனித உரிமை அமைப்புகள், சமூக குழுக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளால் பரவலாக விமர்சிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.