பச்சை மிளகாய் விலை ஆயிரம் ரூபாவாக உயர்வு

11 months ago
Sri Lanka
aivarree.com

சந்தையில் ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாயின் சில்லறை விலை ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது.

ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாயின் மொத்த விற்பனை விலையும் 800 முதல் 900 ரூபா வரை அதிகரித்துள்ளதாக பொருளாதார நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரங்களில் ஒரு கிலோ பச்சை மிளகாய் 350 முதல் 500 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது.

மரக்கறி சந்தைக்கு வரும் பச்சை மிளகாயின் அளவு பெருமளவில் குறைக்கப்பட்டதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

இந் நிலையில் எதிர்வரும் நாட்களில் பச்சை மிளகாயின் விலை மேலும் அதிகரிக்கும் என மரக்கறி சந்தை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.