தாய்வானுடனான அனைத்து இராணுவ தொடர்புகளையும் நிறுத்தவும் – அமெரிக்காவுக்கு சீனா வலியுறுத்தல்

1 year ago
World
aivarree.com

தாய்வானுடனான அனைத்து இராணுவ தொடர்புகளையும் அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்று கோரியுள்ள சீனா, குறிப்பாக தாய்வானுடனான ஆயுத விற்பனையினை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் வெள்ளிக்கிழமை கருத்து தெரிவித்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் டான் கெஃபி,

  • தாய்வானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்வதை சீனா கடுமையாக எதிர்க்கிறது.
  • அமெரிக்காவின் நடவடிக்கைகள் சீனாவின் உள்விவகாரங்களில் தலையீடு செய்வதுடன், ‘ஒரே சீனா’ கொள்கை மற்றும் அமெரிக்க-சீன கூட்டு அறிக்கைகளின் விதிகளை கடுமையாக மீறுகின்றது. இது சீனாவுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துகிறது.
  • அது மாத்திரமின்றி இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலன்கள், மற்றும் தாய்வான் ஜலசந்தியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு கடுமையான அச்சுறுத்தலாகவும் அமைந்துள்ளது.
  • அதேநேரம் சீன இராணுவம் அதன் தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க எப்போதும் தயாராக உள்ளது என்றார்.