இலங்கை மத்திய வங்கி மேற்கொண்டுள்ள முக்கியத் தீர்மானம்

1 year ago
Sri Lanka
aivarree.com

அடுத்த வாரத்திலிருந்து ரூபாயை சுதந்திரமாக வர்த்தகத்தில் ஈடுபட அனுமதிக்கும் வகையில் முக்கியமான தீர்மானங்களை இலங்கை மத்திய வங்கி மேற்கொண்டுள்ளது.

இதன்படி வெளிநாட்டு நாணயங்கள் மீதான முகாமைச் செய்யப்பட்ட மிதப்பு முறை கைவிடப்பட்டு முழுமையான மிதப்பு முறை அமுலாக்கப்படவுள்ளது.

அத்துடன் மத்திய வங்கிக்கு வர்த்தக வங்கிகள் கட்டாயமாக செலுத்தி வைக்க வேண்டிய 15% ஒதுக்கம் அடுத்த வாரத்துடன் முற்றாக நீக்கப்படவுள்ளது.

ஆனால் இருப்புக்களை பேண மத்திய வங்கி டொலர்களை அவ்வப்போது கொள்வனவு செய்யும் என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க கூறினார்.

இதன் விளையாக டொலரின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.