“சர்ப்ரைஸ்” என கூறி கண்களை கட்டி கழுத்தை வெட்டினேன் | காதலன் வாக்குமூலம்

1 year ago
Sri Lanka
aivarree.com

கொழும்பு பல்கலைக்கழக மாணவியொருவர் செவ்வாய்கிழமையன்று பட்டபகலில் கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் படுகொலை செய்யப்பட்டிருந்தார். 

இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் பொலிஸாரிடம் வாக்குமூலமளித்துள்ளார். 

அவர் வழங்கிய வாக்குமூலத்தின் சுருக்கத்தை அய்வரி வாசகர்களுக்காக தருகிறோம். 

மேற்கோள் ஆரம்பம் “

ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருப்பதாக அவளிடம் கூறி அவளது கண்களை கட்டிவிட்டு கழுத்தை அறுத்தேன்.

முக்கியமாக கதைக்க வேண்டி இருக்கிறது என்று சொல்லியே அவளை கொழும்பு ரேஸ்கோர்ஸுக்கு அழைத்து வந்தேன்.  

அவள் எனக்கு மனநோய் இருப்பதாக எப்பொழுதும் கூறியவண்ணமே இருப்பாள். 

அதனால்தான் எனக்கு வருத்தமாக இருந்தது. 

ஒரு மாதமாக அவளைக் கொல்ல திட்டமிட்டிருந்தேன்.  

எதிர்காலத்தில் அவள் வேறொருவருடன் தொடர்பு வைத்திருப்பதை நான் பார்க்க விரும்பவில்லை.

2019 முதல் நான் ஒரு மனநல மருந்து எடுத்து வருகிறேன்.  

நான் 2020 இல் ச்சூட்டியுடன் (கொல்லப்பட்ட பெண்) பழகத் தொடங்கினேன். 

நான் மருந்து எடுத்துக்கொள்கிறேன் என்று அவளிடம் சொல்லவில்லை.  

ஆனால் நான்கைந்து மாதங்களுக்கு முன்புதான் அவளுக்கு அது தெரிய வந்தது.  

பின்னர் அவள் எங்கள் உறவை நிறுத்த விரும்பினாள்.

அதன் பிறகு, அவள் முற்றிலும் மாறிவிட்டாள்.  

அவள் தொடர்ந்து என்னை “பிஸ்ஸா” (பைத்தியம்) என்று அழைத்தாள்.  

வேறொரு உறவின் காரணமாக அவள் மாறிவிட்டாளா? என்று சந்தேகித்தேன்.  

ஆனால் அவளுக்கு அத்தகைய தொடர்பு இல்லை.  

அவள் மீது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.  

அவள் எப்போதும் என்னை பிஸ்ஸா என்று அழைப்பதால் நான் அவளுடன் மனவருத்தத்தோடு இருந்தேன்.

அவளை வேறு யாரும் காதலிப்பதலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதால் நான் அவளைக் கொல்ல திட்டமிட்டேன்.

ஞாயிற்றுக்கிழமை வெல்லம்பிட்டி சந்தியில்  கத்தி ஒன்றை வாங்கினேன்.  

செவ்வாய்க்கிழமை காலையில் முதல் விரிவுரையில் கலந்து கொண்ட பிறகு, முக்கிய விடயம் ஒன்று கதைக்கவிருப்பதாக கூறி ச்சூட்டியை ரேஸ்கொஸ் மைதானத்துக்கு அழைத்தேன். 

முதலில் அவள் மறுத்துவிட்டாள்.

நான் அவளை வற்புறுத்தியதால் அவள் ஒப்புக்கொண்டாள்.  

இருவரும் ரேஸ்கோர்ஸ் நோக்கி நடந்தோம்.  

குளத்துக்கு அருகில் நின்று பேசினோம்.  

அப்போதும் அவள் மீது எனக்கு கோபம் இருந்தது.  

நான் அவளிடம் உனக்காக ஒரு இன்ப அதிர்ச்சி வைத்திருப்பதாகச் சொன்னேன்.

பிறகு அவளை ரேஸ்கோர்ஸ் ஸ்கோர்போர்டுக்கு அருகில் அழைத்து வந்தேன்.

அங்கு வைத்து அவளின் கண்களை கட்டினேன்.  

என்ன “சர்ப்ரைஸ்” என்று மீண்டும் கேட்டாள்.  

பின்னர் கத்தியால் அவள் கழுத்தை அறுத்தேன்.  

அவள் அலறிக் கொண்டு, தன் கண்களை மூடியிருந்த தாவணியைக் கழற்றிவிட்டு உதவிக்காக கூச்சலிட்டாள்.  

நான் அவளை மீண்டும் குத்தினேன்.  

அருகில் இளம் பெண்கள் கூட்டம் இருந்தது.

அவர்கள் அந்த இடத்திற்கு வருவார்கள் என்று பயந்து, நான் அங்கிருந்து ஓடினேன்.  

சம்பவ இடத்திலிருந்து ஓடிய பின் நேராக பேருந்தில் ஏறி ரயிலில் பாய்ந்துவிட நினைத்தேன். 

ஆனால் ரயில்கள் எதும் வரவில்லை. 

வீட்டிற்குச் சென்று எனது பைகள் மற்றும் பொருட்களை வீட்டில் வைத்துவிட்டு இரண்டு முறை களனி ஆற்றில் குதித்தேன்.

ஆனால் அந்த முயற்சிகளும் தோல்வியடைந்தன.  

அப்போதுதான் நான் போலிசாரால் பிடிக்கப்பட்டேன்”

மேற்கோள் முடிவு”

கொழும்பு பல்கலைக்கழகத்தின்  விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் வருட இளங்கலை பட்டதாரி மாணவியான சதுர்த்தி ஹன்சிகா மல்லகராச்சி (24), பசிது சதுரங்க என்பவரால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

-டெய்லிமிரர்-