ஒரே வாரத்தில் 10 ரூபாவால் குறைந்த டொலர் | ஸ்ரேலிங் பவுண்டும் வீழ்ச்சி

11 months ago
aivarree.com

வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

நேற்று (29) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 289.89 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 303.26 ரூபாவாகவும் நிலவியது. 

கடந்த ஒருவார காலத்தில் அமெரிக்கா டொலர் ஒன்று 10 ரூபாவால் வீழ்ச்சியடைந்துள்ளது. 

இதேவேளை ஸ்ரேலிங்க் பவுண்ட் விலையும் கடந்த 7 நாட்களில் 15 ரூபாவால் குறைவடைந்து, நேற்று (29) 357.32 ரூபாவாக பதிவாகி இருந்தது.