உள்ளூராட்சி தேர்தலை நடத்த முடியாதா? | விளக்கம் இதோ

1 year ago
Sri Lanka
aivarree.com

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9ம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பதவி விலகியுள்ளார்.

நிமால் புஞ்சிஹேவா தலைமையிலான 5 பேர் கொண்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஒரு உறுப்பினர் விலகியுள்ளதால், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக சொல்லப்பட்டது.

ஆனால் அரசியல் யாப்புக்கு அமைய, தேர்தலை நடத்துவதில் எந்த தடையும் இல்லை என்று முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய டுவிட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.

அரசியல் யாப்பின் 104ம் சரத்தின் 3ம் உருபுக்கு அமைய, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்தாலும், அதன் செயற்பாடுகள் பாதிக்கப்படாது என்று சொல்லப்பட்டுள்ளமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.