உலகப் பணக்காரர் வரிசையில் பின் தள்ளப்பட்ட ஈலன் மஸ்க்

1 year ago
World
aivarree.com

ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் உரிமையாளரான ஈலன் மஸ்க் நீண்ட காலத்துக்குப் பிறகு உலகப் பணக்காரர்கள் வரிசையில் இரண்டாம் இடத்துக்குச் சென்றார்.

அவரது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் இந்த ஆண்டு சுமார் 100 பில்லியன் டொலர்கள் வீழ்ச்சியடைந்த நிலையில், அவர் பின் தள்ளப்பட்டுள்ளார்.

உலகின் மிகப்பெரிய ஃபெசன் வடிவமைப்பு நிறுவனமான எல்.வி.எம்.எச் இன் உரிமையாளர் பெர்ணார்ட் ஆர்னல்ட், தற்போது முதலாம் இடத்தில் உள்ளார்.

இந்தியாவின் கௌதம் அதானி மூன்றாம் இடத்திலும், அமேசான் நிறுவன உரிமையாளர் ஜெஃப் பொசெஸ் நான்காம் இடத்திலும் உள்ளனர்.

பங்குச் சந்தை முதலீட்டாளர் வரன் பஃபட் 5ம் இடத்தில் இருக்கும் அதேநேரம், பில்கேட்ஸ் ஆறாம் இடத்திலுள்ளார்.