காணாமல் போனோர் கொல்லப்பட்டுவிட்டனர் | இரா.சம்பந்தன்

1 year ago
Sri Lanka
aivarree.com

காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் கொல்லப்பட்டு விட்டார்கள் என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று (13) நடைபெற்ற சர்வ கட்சி கூட்டத்தில் வைத்துத் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தெரிவித்த முக்கியமான சில கருத்துகள்:-

  • யுத்தம் நிறைவடைந்து 10 ஆண்டுகளின் பின்னர் மறுசீரமைப்புக்கான சர்வ கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது.
  • இந்த முயற்சிக்கு முழுமையான ஒத்துழைப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கும்.
  • காணாமல் போனோர் அனைவரும் அரசாங்கத்தினால் கொல்லப்பட்டு விட்டார்கள்.
  • இனினும் அவர்கள் குறித்து போலியாகக் கதைத்து பிரயோசனம் இல்லை.
  • அவர்களுக்கு உண்மையில் என்னானது என்று விசாரணை நடத்தி அரசாங்கம் பொறுப்புக்கூற வழி செய்ய வேண்டும்.
  • இதுவே இப்போதைக்கு இடம்பெற வேண்டிய முக்கிய விடயமாகும்.

-காலைக்கதிர்-