இலங்கையின் 10 வங்கிகள் தரம் குறைப்பு | ஃபிட்ச் அதிரடி

1 year ago
Sri Lanka
aivarree.com

இலங்கையில் உள்ள முக்கியமான 10 வங்கிகளின் தரத்தை நிதி தரப்படுத்தல் சர்வதேச அமைப்பான ஃபிட்ச் தரமிறக்கியுள்ளது.

நீண்டகால நிதி நிலைமைகளின் அடிப்படையில் இந்த தரக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த வங்கிகளின் கடன்கள் மற்றும் அரசாங்கம் விதித்து வருகின்ற கட்டுப்பாடுகள் போன்ற இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

தரம் குறைக்கப்பட்டுள்ள வங்கிகளின் பட்டியல்

இலங்கை வங்கி
மக்கள் வங்கி
கொமர்சல் வங்கி
ஹட்டன் நெசனல் வங்கி
சம்பத் வங்கி
கார்கில்ஸ் வங்கி
டி.எஃப்.சீ.சீ வங்கி
தேசிய அபிவிருத்தி வங்கி
செலான் வங்கி
நேசன் ட்ரஸ்ட் வங்கி

இந்த பட்டியலில் குறிப்பிடப்படாத வங்கிகளுக்கு இந்த தரப்படுத்தலில் எந்த தாக்கமும் இல்லை என்றும் ஃபிட்ச் அறிவித்துள்ளது.

அதேநேரம் இலங்கை மின்சார சபை மற்றும் சிறிலங்கா டெலிகொம் போன்ற அரச நிறுவனங்களின் தரத்தையும் ஃபிட்ச் ரேட்டிங் குறைத்துள்ளது.