ஆசிய திரைப்பட விருது விழா நாளை – PS-1 ஆறு பிரிவுகளில் பரிந்துரை

1 year ago
Infotainment
aivarree.com

16 ஆவது ஆசியத் திரைப்பட விருது வழங்கும் விழா நாளை ஹோங்கொங்கில் நடைபெறவுள்ளது.

இவ்விருதுக்கு ‘பொன்னியின் செல்வன்-1’ திரைப்படம் 6 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதன்படி பொன்னியின் செல்வன் திரைப்படம் சிறந்த படம், சிறந்த இசை, சிறந்த எடிட்டிங், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த கலை இயக்குனர், சிறந்த உடை அலங்காரம், உள்ளிட்ட 6 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும் பாகுபலி இயக்குனர் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் இரண்டு பிரிவுகளில் பரிந்துரையாகியுள்ளது.

கல்கி எழுதிய நாவலைத் தழுவி மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன் 1’ திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.