பாகிஸ்தானுடன் $3 பில்லியன் டொலர் அளவிலான ஒப்பந்தத்தை எட்டிய IMF

11 months ago
World
aivarree.com

நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுடன் சர்வதேச நாணய நிதியம் (IMF) 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவிக்கான பணியாளர் அளவிலான ஒப்பந்தத்தை எட்டியுள்ளது.

உலகளாவிய கடன் வழங்குநர் குழுவால் இன்னும் அங்கீகரிக்கப்பட வேண்டிய இந்த ஒப்பந்தம் எட்டு மாத தாமதத்திற்குப் பிறகு எட்டப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தைப் பாதுகாக்க, பாகிஸ்தானின் மத்திய வங்கி திங்களன்று அதன் முக்கிய வட்டி விகிதத்தை 22% ஆக உயர்த்தியது.

எவ்வாறெனினும் இந்த ஒப்பந்தம் ஜூலை மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்று பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தெற்காசிய நாடான பாகிஸ்தான் 1947 இல் பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.