zee தமிழ் ‘சரிகமப’ வில் பாடவுள்ள மலையக சிறுமி

11 months ago
Sri Lanka
aivarree.com

இந்தியாவின் zee தமிழ் தொலைக்காட்சியால் ஒளிபரப்பப்படவுள்ள ‘Sa Re Ga Ma Pa Lil Champs 2023’ பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பை மலையக மாணவியான ஆஷினி பெற்றுள்ளார்.

கண்டி மாவட்டத்துக்குட்பட்ட புசல்லாவை, நயப்பன தமிழ் வித்தியாலய மாணவியான ஆஷினி இன்று இந்தியா நோக்கி புறப்பட்டுள்ளார்.

மலையக தமிழர்களின் அடையாளமாக – குறிப்பாக பெருந்தோட்ட தொழிலாளியின் பிள்ளையொருவர் சர்வதேச ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள குறித்த இசை நிகழ்வில் பங்கேற்பது மலையக மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளது.