இலங்கையின் வறுமை நிலை தொடர்பில் உலக வங்கியின் அறிக்கை

1 month ago
aivarree.com

இலங்கையில் 57 7700 பேர் வறுமையில் வாடுவதாக உலக வங்கியின் அண்மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அதிக பணவீக்கம், மக்களின் வருமானத்தில் அதிகரிப்பு இல்லாமை, வேலை இழப்பு மற்றும் வருமானச் சரிவு ஆகியவையே காரணங்கள் என்று உலக வங்கி வெளிப்படுத்துகிறது.

மேலும் இலங்கையின் அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 2023 ஆம் ஆண்டில் இலங்கையில் 25.9% பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்வார்கள் என்பதுடன் தொடர்ந்து நான்காவது ஆண்டாக வறுமை அதிகரித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு குறையும் என்று வங்கி கணித்துள்ளது.