ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்

4 weeks ago
World
aivarree.com

ஜப்பானின் ஹோன்ஷு நகரில் இன்று (06) 3ஆவது முறையாக 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜப்பானின் ஹொன்ஷு கிழக்கு கடலோர பகுதியில் 04ஆம் திகதி காலை 8.46 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானது. இந்நிலநடுக்கம் 32 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நிலநடுக்க அறிவியல் மையம் குறிப்பிட்டிருந்தது.