கொழும்பில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம்

2 weeks ago
Sri Lanka
aivarree.com

கொழும்பில் இன்று (24) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதுடன், பல வீதிகள் மூடப்படவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மத்தள, தனமல்வில, வெல்லவாய, உமா ஓயா ஆகிய பகுதிகளில் உள்ள பல வீதிகள் காலை 9:45 மணி முதல் 11 மணி வரை மூடப்படவுள்ளன.

அத்தோடு கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை மற்றும் இரவு 9:30 மணி முதல் இரவு 10:30 மணி வரை மூடப்படவுள்ளது

மேலும் கொழும்பு லோட்டஸ் சுற்றுவட்டம் பிற்பகல் 3.30 மணிக்குப் பின்னர் மூடப்படவுள்ள நிலையில் ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து காலி வீதி உட்பட பல வீதிகள் மாலை 6.00 மணி முதல் 6.30 மணி வரை மூடப்படவுள்ளன.

மீண்டும் இரவு 7.30 மணிக்குப் பின்னர் கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் பாதை மூடப்படவுள்ளதுடன் இரவு 9.30 மணிக்குப் பின்னர் கொழும்பு கோட்டையில் இருந்து NSA சுற்றுவட்ட காலி வீதி உட்பட பல வீதிகள் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.